‘ஐபேட் கவருக்குள் நுழைந்து ரேபிஸ் நோயைக் கொடுத்துப்போன வௌவால்..’ காப்பாற்றியவருக்கு நடந்த சோகம்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் ஐபேட் கவருக்குள் நுழைந்து மறைந்திருந்த வௌவாலால் முதியவர் ஒருவர் ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்.

‘ஐபேட் கவருக்குள் நுழைந்து ரேபிஸ் நோயைக் கொடுத்துப்போன வௌவால்..’ காப்பாற்றியவருக்கு நடந்த சோகம்..

ஹாம்ப்ஷைர் பகுதியைச் சேர்ந்த 81 வயது ராய் சிவெர்ட்சன் சில நாட்களுக்கு முன்பு தனது ஆப்பிள் ஐபேடின் கவருக்குள் வௌவால் ஒன்று சிக்கியிருப்பதைப் பார்த்துள்ளார். அதுவாக வெளியே வராததால் அவரே அதை வெளியே எடுத்து விட்டுள்ளார். அடுத்த நாள் பார்க்கும்போதும் அந்த வௌவால் அவர் விட்ட இடத்திலேயே இருந்துள்ளது. அதற்கு பிறகு சிறிது நேரத்திலேயே அது இறந்துள்ளது.

பின்னர் ராய் அதை வெளியே போட்டுவிட்டு அந்த இடத்தை சுத்தம் செய்துள்ளார். இந்த நிகழ்வுக்குப் பிறகு அவருக்கு அடிக்கடி பல விதமான உடல் சார்ந்த பிரச்சனைகள் வந்துள்ளன. தீராத தலைவலி, காய்ச்சல் என மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்த போது அவருக்கு ரேபிஸ் நோய்க்கான அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் போடப்பட்டு ராய் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

பொதுவாக ரேபிஸானது நாய், வௌவால், ஓநாய் போன்றவை கடிப்பதாலோ அல்லது அதன் எச்சில் தோலில் படுவது மூலமாகவோ பரவும் தன்மை கொண்டது. ரேபிஸ் நோய்க்கு உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால் நரம்பியல் பிரச்சனை ஏற்பட்டு மரணம் வரை ஏற்படும் அபாயம் உள்ளது.

IPAD, BAT, RABIES