17 வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் இந்திய பிரதமராக மோடி இன்று பதவியேற்கவுள்ள நிலையில் அவருடன் கேபினட் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.
17 வது மக்களவைத் தேர்தலில் பாஜக 350 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று மாலை பதவியேற்கவுள்ளது. இதில், பல வெளிநாட்டுத் தலைவர்கள்,திரைத்துறை,விளையாட்டு பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெறப்போகும் நபர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பழைய அமைச்சர்கள், புதிய நபர்கள், கூட்டணி கட்சியை சேர்ந்த நபர்கள் என பலரும் இடம்பெற்றுள்ளனர்.
பட்டியல் பின்வருமாறு
ரவி சங்கர் பிரசாத்
பியூஷ் கோயல்
நிர்மலா சீதாராமன்
கிரண் ரிஜிஜு
சுஷ்மா சுவராஜ
ராஜ்நாத் சிங்
ரத்தன் லால் கடாரியா
நிதின் கட்கரி
ராவ் இந்தர்ஜித் சிங்
அர்ஜுன் மேக்வால்
கிருஷ்ணபால் குர்ஜார்
ஹர்சிம்ரத் கவுர்
டி.வி. சதானந்த கவுடா
பாபுல் சுப்ரியோ
பிரகாஷ் ஜவடேகர்
ராம்தாஸ் அத்வாலே
ஜிதேந்தர் சிங்
சாத்வி நிரஞ்சன் ஜோதி
புருஷோத்தம் ருபாலா
ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்
தவார் சந்த் கெலாட்
ஆர்.சி.பி. சிங்
கிஷான் ரெட்டி
சுரேஷ் அங்காடி
ரவிந்திரநாத்
கைலாஷ் சவுத்ரி
பிரலாத் ஜோஷி
சோம் பிரகாஷ்
ரமேஷ்வர் தேலி
சுப்ராத் பதக்
தேவஸ்ரீ சவுத்ரி
இதில் மேலே குறிப்பிட்டுள்ள 37 நபர்களும் புதிய அமைச்சரவையில் பிரதமர் மோடியுடன் இன்று பதவியேற்கவுள்ளனர்.