வேலை கிடைக்கும் என நினைத்து ஆஸ்திரேலியாவில் பள்ளி மாணவர் ஒருவர் ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்புத் தளத்தை ஹேக் செய்த விநோதம் நடந்துள்ளது.
அடிலெய்டைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஆப்பிளின் பாதுகாப்புத் தளத்தை இரண்டு முறை ஹேக்கிங் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் மாணவர் தரப்பு, “ஹேக்கிங் செய்து கவனத்தை ஈர்த்தால் ஆப்பிளில் வேலை கிடைக்கும் என நினைத்தே இப்படி செய்துள்ளார். இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை உணராமல் இப்படி செய்துவிட்டார்” எனக் கூறியுள்ளது.
இதைக் கேட்ட நீதிமன்றம், மாணவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 35 ஆயிரம் பிணைத்தொகை செலுத்த உத்தரவிட்டுள்ளது. 9 மாத கால நன்னடத்தைச் சான்றிதழையும் சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளது. இவர் 2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் ஆப்பிள் தளத்தை ஹேக்கிங் செய்ததாகக் கூறப்படுகிறது.