‘தோனிக்கு மட்டும்தான் அது தெரியும்’.. அத எப்போ பண்ணனும்னு அவருதான் சொல்லணும்’
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனியின் ஓய்வு குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தோனி தலைமையிலான இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி என இரண்டு உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதனால் இந்த வருடம் நடைபெற உள்ள உலகக்கோப்பையில் பங்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது. கடந்த 2014 -ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். இதனை அடுத்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.
ஆனாலும் 2018 -ம் ஆண்டு தோனிக்கு மிக மோசமான வருடமாக அமைந்தது. அந்த ஆண்டு 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தோனி வெறும் 275 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் தோனி ஓய்வு பெற வேண்டும் என பலரும் விமர்சனம் செய்தனர். இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் அரைசதம் அடித்தார். மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில்,‘இந்திய அணியில் சிறந்த வீரராக இருப்பவர் தோனி. அவருக்கு எதை எப்போது செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரியும். தோனிக்கு மட்டும்தான் அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்பது தெரியும். உலகக்கோப்பை முடிந்தோ அல்லது 5 வருடங்கள் கழித்து ஓய்வு பெறுவதோ அது அவரின் முடிவு’ என தெரிவித்துள்ளார்.