‘கொரானாவின் கொடூரம் கொறையல.. அதனால’.. ‘ஆப்பிள் நிறுவனம்’ எடுத்த அதிரடி முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்இதுவரை சீனாவில் 722 பேரின் உயிரை பறித்த கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து, சீனாவில் இயங்கி வரும் கடைகளும், தொடர்பு மையங்களும், சில்லறை விற்பனை கடைகளும் மூடப்படுவதாக ஆப்பிள் நிறுவன அதிரடியாக தெரிவித்துள்ளது.

முன்னணி சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு இணங்க, சீனாவில் இருந்த தங்களது 42 கிளைகளையும் மூடுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள ஆப்பிள் நிறுவன துணைத் தலைவர் டாய்ர்ட்ரி ஓ' பிரைன் அடுத்த வாரம் இந்த கடைகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தவிர, இது தொடர்பான விபரங்களை ஊழியர்கள் தங்கள் மேலாளர்களுடன் போனில் தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
CHINA, APPLE, CORONAVIRUS