‘யோசிக்காதீங்க.. கைய புடிச்சு மேல வாங்க!’.. ‘இதயத்தை வென்ற ஒராங்குட்டான் குரங்கு’.. ‘வைரல் புகைப்படம்’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தெற்காசியாவின் Borneo(போர்னியோ) காடுகளில் விஷ உயிரினங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஊழியர் ஒருவருக்கு ஒராங்குட்டன் வகை குரங்கு உதவி செய்ய முயற்சித்துள்ள காட்சி புகைப்படமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘யோசிக்காதீங்க.. கைய புடிச்சு மேல வாங்க!’.. ‘இதயத்தை வென்ற ஒராங்குட்டான் குரங்கு’.. ‘வைரல் புகைப்படம்’!

தெற்காசியாவின் போர்னியோ காடுகளின் ஒரு பகுதியில் இருந்த ஆற்றில் பாம்புகளைத் தேடிக் கொண்டிருந்த அந்த ஊழியரை, அவ்வழியே வந்த ஒராங்குட்டன் வகை குரங்கு, இந்த ஊழியரை சிறிது நேரம் நின்று கவனித்துள்ளது. பின்னர் அவர் ஆபத்தில் தத்தளித்து வருவதாக நினைத்து, அவரின் அருகே வந்து கரையில் இருந்தபடி கை கொடுத்து, தன் கையை பிடித்து கரையேறி வருமாறு அறிவுறுத்துகிறது.

இதனை அவ்வழியே நண்பர்களுடன் சென்ற அனில் பிரபாகர் என்பவர்

புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அந்த ஊழியர் ஒராங்குட்டான் குரங்குக்கு கை கொடுக்கவில்லை. ஏனென்றால் எல்லாவற்றுக்கு மேல் அது ஒரு வன உயிரினம் என்று அந்த ஊழியர் கூறியதாக  அனில் தெரிவித்துள்ளார்.

HUMANITY, ANIMAL, ORANGUTAN