‘அதுக்குன்னு இப்டியா?’.. பள்ளி நிர்வாகத்தை விநோதமாகக் கண்டித்த ஊர் மக்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பள்ளி மூடப்படுவதை தடுப்பதற்காக, பிரான்சில் ஆடுகளை பள்ளியில் சேர்த்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘அதுக்குன்னு இப்டியா?’.. பள்ளி நிர்வாகத்தை விநோதமாகக் கண்டித்த ஊர் மக்கள்!

பிரான்சின் ஆல்ப்ஸில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் முதல்நிலை பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் அப்பள்ளி மூடப்படும் என்று தேசிய கல்வி ஆணையம் தெரிவித்திருந்தது. பள்ளி மூடப்படுவதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனையடுத்து பள்ளி மூடப்படுவதை தடுப்பதற்காக, அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் சேர்ந்து புதுத் திட்டம் ஒன்றை உருவாக்கினர். அதில் ஒருவர் தனது நாயுடன், 50 ஆடுகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அதில் 15 ஆடுகளுக்கு பிறப்பு சான்றிதழ் அளித்து பள்ளியில் மாணவர்களாக சேர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

'ஆடுகளை சேர்த்ததால், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து பள்ளியை மூட நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்' என்று பெற்றோர் ஒருவர் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களின் நலனை விட, மாணவர்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்துவதாக கல்வி ஆணையத்தின் மீது பெற்றோர் குற்றஞ்சாட்டினர். புதிய மாணவர்களை வரவேற்க மிகுந்த ஆர்வத்துடன் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் காத்திருந்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

FRANCE