'என்னாது!! இனிமே இந்த போன்லலாம் வாட்ஸ்ஆப் வொர்க் ஆகாதா?'...

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

விண்டோஸ் ஃபோன்களில் இந்த ஆண்டு இறுதி முதல் வாட்ஸ்ஆப் செயலி இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'என்னாது!! இனிமே இந்த போன்லலாம் வாட்ஸ்ஆப் வொர்க் ஆகாதா?'...

உலகம் முழுவதும் வாட்ஸ்ஆப் செயலியைத் தகவல் பரிமாற்றம் செய்துக்கொள்வதற்காகப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விண்டோஸ் ஃபோன்களில் 2019 டிசம்பர் 31-ம் தேதி முதல் வாட்ஸ்ஆப் செயலி இயங்காது என்று தெரிவித்துள்ளனர்.

பொதுவாக பயனர்களுக்கு ஏற்ப செயலிகளில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் வெளியிடப்படுவது வழக்கம். அடுத்த புதிய அப்டேட்டை வாட்ஸ்ஆப் நிறுவனம் ஜூன் மாதம் வெளியிட உள்ளது. அதேபோல், 2019 டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு விண்டோஸ் ஃபோன்களில் வாட்ஸ்ஆப் செயலி இயங்காமல் போகலாம். ஆனால் விண்டோஸ் கணினிகளில் வாட்ஸ்ஆப் செயலி இயங்கும்.

எனவே கணினிகளில் இயங்கும் வாட்ஸ்ஆப் செயலி போன்றே விண்டோஸ் மொபைல்களுக்கும் வாட்ஸ்ஆப் தரப்பிலிருந்து புதிய செயலி உருவாக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது எப்போது வரும், கண்டிப்பாகப் பயன்பாட்டிற்கு வருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அதுமட்டுமால்லாமல் 2020 பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் ஆண்ட்ராய்டு பதிப்பான v2.3.7 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளிலும், ஐ.ஓ.எஸ் .7 மற்றும் அதற்கு முந்தைய இயங்குதளங்களிலும் வாட்ஸ்ஆப் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

WHATSAPP, WINDOWS, ANDROID