“அட உலகத்துல என்னலாம் கண்டுபிடிக்குறாங்கப்பா”!... இந்த கேம் விளையாடுங்க இந்த நோயை விரட்டுங்க!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்மனிதர்கள் சர்க்கரை சாப்பிடும் அளவை குறைக்கும் வகையில் புதிய கம்ப்யூட்டர் கேம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் பல நோய்களால் அவதிப்படுகின்றனர். அதில் குறிப்பாக சர்க்கரை நோயால் உலகத்தில் 70 சதவீத மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், உடல் எடையை குறைக்க மருத்துவர்கள் முதலில் சொல்வது இனிப்பு சாப்பிடுவதை குறைத்துவிடுங்கள் என்றுதான் சொல்வார்கள்.
இந்நிலையில், மனிதர்கள் சர்க்கரை சாப்பிடுவதை குறைக்கும் வகையில் புதிய கம்ப்யூட்டர் கேம் ஒன்றை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கம்ப்யூட்டர் கேமை சர்க்கரை அதிகம் சாப்பிடும் 109 மனிதர்களை வைத்து நடத்திய சோதனையில் இந்த கேமை விளையாடும் மனிதர்களின் மூளைக்கு குறைந்த அளவு சர்க்கரையே சாப்பிட வேண்டும் என இந்த கேம் பயிற்சி அளித்துள்ளது.
மேலும், இந்த கேமை விளையாடிய மனிதர்கள் தாமாகவே சர்க்கரை சாப்பிடுவதை குறைத்துள்ளனர். இந்நிலையில், மனிதர்களின் மனது மற்றும் உடல் நலனை முடக்கி அவர்களை அடிமையாக்கும் கேமிற்கு நடுவில் மனிதரின் உடல் நலனை மேம்படுத்த உருவாக்கப்பட்ட புதிய கேம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இந்த கேமில் மனிதர்கள் சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும். அதனால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், அவற்றை எப்படி தவிர்ப்பது குறித்து அதிரடியான கிராபிக்ஸ் மற்றும் பல வண்ணங்களில் இந்த கம்ப்யூட்டர் கேமை வடிவமைத்துள்ளனர்.