‘ஒரு சூயிங்கத்துக்கே அன்லாக் ஆகுதா? அப்போ ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்?’.. தீயாய் பரவும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

ஆண்ராய்டு போன்களில் தொடங்கி, ஐபோன் வரை அனைத்து போன்களுக்கும் பாதுகாப்பாக இருப்பதாக பலரும் உணருவது,  பேட்டர்ன் லாக், ஃபிங்கர் லாக் அல்லது பாஸ்கோடுதான்.

‘ஒரு சூயிங்கத்துக்கே அன்லாக் ஆகுதா? அப்போ ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்?’.. தீயாய் பரவும் வீடியோ!

ஹை செக்யூரிட்டி புரொடிக்டிவ் என்று சொல்லப்படும் மேற்கண்ட லாக் செய்யும் முறைகள்தான் ஆண்ராய்டு போன்கள் தொலைந்து போனாலும் கூட அவற்றைக் கண்டுபிடிக்க இவையே உதவுகின்றன. ஆனாலும் இவற்றுள் 3 முறைக்கும் மேல் தவறுதலாக கொடுத்தால் போன் லாக் ஆகிவிடுவதால் இன்னும் பாதுகாப்பான வழிமுறைகளாக இவை பார்க்கப்பட்டன.

இந்த நிலையில்,  கடந்த சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட நோக்கியாவின் நோக்கிய-9 பியூர்வியூ மாடல் போன் எச்.எம்.டி குளோபல் நிறுவனத்தால் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.  இதில் மிகவும் அட்வான்ஸான இன் டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் சென்ஸார் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான ஒன்றில்,  நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் சாஃப்ட்வேரை அப்டேட் செய்தால், பல பிரச்சனைகள் உருவாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஃபிங்கர்பிரின்ட் சென்ஸார் பாதிக்கப்படுகிறது. அதாவது நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் சூயிங்கம் பாக்கெட்டை பிரித்து சூயிங்கத்தின் முன்பகுதியை டிஸ்ப்ளேவில் வைத்து தேய்ப்பதன் மூலமாக செல்போன் அன்லாக் ஆகும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.  அதாவது என்னதான் ஹார்டுவேர் பாதுகாப்பானதாக இருந்தாலும் கூட, அதை வலுவாக்கும் வகையிலான மென்பொருள் இருக்க வேண்டும்.

ஆனால் சாஃப்ட்வேர் அப்டேட் செய்வதனால் இந்த இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் சென்ஸாரை எளிதாக ஹேக் செய்யும் வகையில் இருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இத்தனை பாதுகாப்பற்ற வசதி போனில் இருக்கிறதா? அல்லது இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பன போன்ற விசாரணையில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

SMARTPHONE, NOKIA, PUREVIEW, NOKIA9