‘இந்த 17 App உங்க போன்ல இருக்கா..?’.. உடனே ‘டெலிட்’ பண்ணீருங்க...!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஐபோனில் பிரச்சனைக்குரிய 17 செயலிகளை பயனர்கள் உடனடியாக டெலிட் செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செல்போன் பாதுகாப்பு நிறுவனமான வாண்டேரா (Wandera cybersecurity firm) ஐபோனுக்கு ஒத்துவராத 17 செயலிகளை பட்டியலிட்டுள்ளது. இந்த செயலிகள் மூலம் தேவையில்லாத விளம்பரங்கள் பிண்ணனியில் ஓடிக்கொண்டிருக்கும். இந்த பிரச்சனைக்குரிய செயலிகளை எப்போது பயன்படுத்தினாலும் தவறான ஒரு நபர் அதன்மூலம் சம்பாதித்துக் கொண்டிருப்பார் என வாண்டேரா எச்சரித்துள்ளது.
இந்நிலையில் இந்த செயலிகள் மீது ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதில், ஆர்டிஓ வாகனத் தகவல் தொடர்பான செயலி, ஈஎம்ஐ கால்குலேட்டர், லோன் ப்ளானர், ஃபைல் மேனேஜர்-ஸ்மார்ட் ஜிபிஎஸ், ஸ்பீடோமீட்டர், கிரிக் ஒன் லைவ் கிரிக்கெட் ஸ்கோர்ஸ், டெய்லி ஃபிட்னெஸ்-யோகா போஸ், எஃப்எம் ரேடியோ-இண்டெர்நெட் ரேடியோ, ட்ரெய்ன் தகவல், ப்ளேஸ் ஃபைண்டர், ரமதான் டைம்ஸ் 2019, ரெஸ்டாரண்ட் ஃபைண்டர்-பைண்ட் புட், பிஎம்ஐ கால்குலேட்டர்-பிஎம்ஆர் கால்க், டுயல் அக்கவுண்ட், வீடியோ எடிட்டர்-ம்யூட் வீடியோ, இஸ்லாமிக் வேல்ர்ண்ட்-கிப்லா மற்றும் ஸ்மார்ட் வீடியோ. இந்த 17 செயலிகள் அபாயகரமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.