திருச்சி: '2 நாட்களாக நீடிக்கும் இழுபறி'.. 70 அடி ஆழத்தில் குழந்தையின் போராட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சி அருகே உள்ள மணப்பாறையில் உள்ள  நடுக்காட்டுப்பட்டியில் கட்டடத் தொழிலாளி பிரிட்டோ ஆரோக்கியதாஸ் என்பவரது வீட்டு பயன்பாட்டுக்காக 5 வருடத்துக்கு முன்பு தோண்டப்பட்ட 26 அடி ஆழ்துளை கிணறு, மழை பெய்ததன் காரணமாக ஈரப்பதம் மிகுந்து காணப்பட்டது.

திருச்சி: '2 நாட்களாக நீடிக்கும் இழுபறி'.. 70 அடி ஆழத்தில் குழந்தையின் போராட்டம்!

இதை அறியாமல் அப்பகுதியில் விளையாடச் சென்ற பிரிட்டோவின் 2 வயது குழந்தை சுஜித் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததை அடுத்து, குழந்தையை மீட்க சிறப்பு துளையிடும் உபகரணத்தை மதுரையில் இருந்து அக்கருவியை கண்டுபிடித்த மணிகண்டன் கொண்டுவந்தார். மணிகண்டனின் குழந்தைக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த நிலைக்கு ஆளானதை அடுத்து அவர் இக்கருவியைக் கண்டுபிடித்தார். பின்னர் கோவையில் இருந்து இன்னொரு மீட்புக்குழுவும் திருச்சி விரைந்தது.

முன்னதாக திருச்சி கலெக்டர் தலைமையில் பொக்லைன் மூலம் ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டப்பட்டும், பொதுமக்களின் உதவியுடனும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், குழந்தைக்குத் தேவையான வெளிச்சம் மற்றும் 2 சிலிண்டர்கள் மூலம் ஆக்ஸிஜன் சப்ளை ஆகியவை கொடுக்கப்படும் பணியும் துரிதப்படுத்தப்பட்டது.

குழந்தையின் நிலையை அறிவதற்காக கேமராவும் ஆழ்துளைக் கிணற்றுக்குள் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் குழந்தையை மீட்க, 5 அடிக்குக் குறையாமல் தோண்டப்பட்ட வேண்டியிருந்துள்ளது. ஆனால் ஆழம் 10 முதல் 12 அடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. பின்னர் குழந்தை பயந்துவிடக் கூடாது என்பதற்காக குழந்தையின் அம்மா பேச்சு கொடுப்பதாகவும், குழந்தையின் அழுகுரல் கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இதுபோன்ற சூழலில் குழந்தைக்கு பெற்றோர்கள் பேச்சுக் கொடுத்து தைரியமூட்ட வேண்டியது அவசியம் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் கூறியுள்ள நிலையில் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், தீயணைப்புத்துறையினர், மருத்துவக்குழு மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளும் மீட்புப் பணிகளை கண்காணித்து வந்த நிலையில் அந்த கிராமத்து இளைஞர்களும் மீட்புப்படையினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் மாலை 5.45 மணிக்கு குழியில் விழுந்த குழந்தை நல்ல நிலையில் இருப்பதாகவும், கைகளை தலைக்கு மேலே வைத்து அசைப்பதாகவும் கூறப்பட்டது. குழந்தைக்கு அவரது மாமா பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தார். குழந்தையும் எதிர்வினையாற்றியதாகத் தெரிகிறது.

இதனிடையே சமூக வலைதளங்களில் #SaveSujith என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வந்தது. இந்நிலையில் குழந்தை சுஜித் 70 அடி ஆழத்துக்குச் சென்றதால்,  குழந்தையை மீட்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. குழந்தையின் கைகளில் கயிறு கட்டி இழுக்கும் முயற்சி 3 முறை நழுவியது. அடுத்தடுத்து புதிய மீட்புக்குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் முயற்சித்து வருகின்றன. 

CHILD, TRICHY, BORELWELL