‘பேலன்ஸ் இல்லனாலும் ஃப்ரீயா கால் பண்ணலாம்’!.. பிரபல நெட்வொர்க் அதிரடி அறிவிப்பு..! குஷியில் வாடிக்கையாளர்கள்..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வைஃபை காலிங் என்ற புதிய சேவையை அறிமுப்படுத்தியுள்ளது.
இந்த வைஃபை காலிங் (WiFi Calling) சேவை வீடு மற்றும் அலுவலகத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் உதவும் என்றும், இந்த சேவையை முற்றிலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதியை ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகியவற்றில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Introducing Jio Wi-Fi calling. Clear, uninterrupted and FREE. Follow the steps, to set-up now.
Know more: https://t.co/gOgIS20J2X#WifiCalling #VoWiFi #JioWifiCalling #VoiceCalls #JioDigitalLife pic.twitter.com/lbNcSDECb2
— Reliance Jio (@reliancejio) January 8, 2020
வைஃபை காலிங் மூலம் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்துகொள்ள முடியும். எந்தவித வைஃபையை பயன்படுத்தியும் வைஃபை காலிங் செய்து கொள்ளலாம் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் உங்கள் செல்போனில் பேலன்ஸ் இல்லையென்றாலும் வைஃபை காலிங் வசதி மூலம் சாதாராண அழைப்புகளை இலவசமாக பெறமுடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். வைஃபை காலிங் வசதி உள்ள அனைத்து செல்போன்களிலும் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.