‘கஸ்டமர் தான் முக்கியம்’... 'ஆல் இன் ஒன் திட்டத்தில் அதிரடி சலுகை வழங்கும் ஜியோ'!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

40 சதவிகிதம் கட்டணம் உயர்ந்தாலும், ஆல் இன் ஒன் திட்டத்தின் கீழ் அதிரடி சலுகை வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘கஸ்டமர் தான் முக்கியம்’... 'ஆல் இன் ஒன் திட்டத்தில் அதிரடி சலுகை வழங்கும் ஜியோ'!

வரி தொடர்பான கடன்களை சமாளிக்க, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் மொபைல் ஃபோன் சேவைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இதில் ஏர்டெல், வோடபோன் ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள், பிரீபெய்ட் எண்களுக்கான டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் கட்டணத்தை 42 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளன. இந்தப் புதிய கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனமும் 40 சதவிகிதம் சேவை கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு வரும் டிசம்பர் 6-ம் தேதி முதல் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அமலுக்கு வருகிறது. எனினும் 300 சதவிகிதம் வரை வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்று ஜியோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இதுதொடர்பாக ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘AIO (All In One) திட்டத்தின் கீழ், ஒரு மாதத்துக்கு தினசரி 2 ஜி.பி. டேட்டா மற்றும் அன்லிமிடெட் ஜியோ கால்கள், பிற நெட்வொர்க் எண்களுக்கு 1000 நிமிடங்கள் என கொண்ட பேக்கிற்கான கட்டணமாக, 222 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய திட்டத்துக்கு, கூடுதலாக 111 ரூபாய் செலுத்தினால், 2 மாதத்துக்கு 333 ரூபாயில் சலுகைகள் கிடைக்கும். இதேபோல் மேலும் கூடுதலாக 111 ரூபாய் செலுத்தினால் 3 மாதத்துக்கு 444 ரூபாயில் சலுகைகள் கிடைக்கும்.

JIO, AIRTEL, VODAFONE