‘ரூ.1000’ லஞ்சப் புகாரில் சிக்கிய செவிலியர் செய்த அதிர்ச்சி காரியம்.. ‘மதுரையில் நடந்த பரிதாபம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரையில் லஞ்சப் புகாரால் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி செவிலியர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

‘ரூ.1000’ லஞ்சப் புகாரில் சிக்கிய செவிலியர் செய்த அதிர்ச்சி காரியம்.. ‘மதுரையில் நடந்த பரிதாபம்’..

மதுரையை அடுத்த பரவையைச் சேர்ந்த தனிக்கொடி என்பவருடைய உறவுக்காரப் பெண்ணிற்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை உறவினர்களிடம் காட்டுவதற்காக அங்கிருந்த உதவி செவிலியர் கார்த்திகா என்பவர் ரூ.1000 லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து தனிக்கொடி அளித்த புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவமனை முதல்வர் சங்குமணி நடத்திய விசாரணையில் கார்த்திகா லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த நவம்பர் 18ஆம் தேதி மருத்துவமனை முதல்வர் கார்த்திகாவை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திகா நேற்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

MADURAI, NURSE, SUICIDE, BRIBERY, GOVERNMENT, HOSPITAL