‘ரூ.40 லட்சம் மதிப்புள்ள கணினிகள்’.. இந்திய மாணவர் செய்த காரியத்துக்கு 10 ஆண்டுகள் சிறை!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

தான் படித்து வந்த கல்லூரியில் உள்ள கணினிகளில் வைரஸ் புரோகிராமை பயன்படுத்தி செயலிழக்கச் செய்த இந்திய மாணவருக்கு அமெரிக்காவில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

‘ரூ.40 லட்சம் மதிப்புள்ள கணினிகள்’.. இந்திய மாணவர் செய்த காரியத்துக்கு 10 ஆண்டுகள் சிறை!

விசாவில் அமெரிக்கா சென்ற இந்தியாவைச் சேர்ந்த 27 வயது மாணவரான விஸ்வநாத் அகுதோடா, நியூயார்க் மாகாணத்தின் தலைநகரில் உள்ள அல்பேனி கல்லூரியில் கல்வி பயின்று  வந்தார்.

இந்த நிலையில்தான் "USB Killer" தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  கடந்த பிப்ரவரி 14ம் தேதி கல்லூரியின் 66 கணிப்பொறிகள், மானிட்டர்கள் உள்ளிற்றவற்றை செயலிழக்கச் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, வடக்கு கரோலினாவில் கைது செய்யப்பட்டார்.

இந்த "USB Killer" மூலம் அனுப்பப்படும் கட்டளைகள் கணிப்பொறியின் கெப்பாசிட்டரை வேகமாக மின் ஊக்கம் (Rapid Charge) செய்வதோடு, டிஸ்சார்ஜ் செய்யவும் வைக்கிறது. இதன் மூலம் கணிப்பொறியின் ரேப்பிட் சிஸ்டம் சிதைகிறது. இதன்மூலம் ரூ.40 லட்சம் மதிப்புள்ள கணினிகளை அழித்ததாக  தானே ஒப்புக்கொண்ட மாணவர் விஸ்வநாத் வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஊடுருவல் நோக்கத்தில் இதைச் செய்த இந்திய மாணவர் விஸ்வநாத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, அபராதத் தொகையாக 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர்களும் ( இந்திய மதிப்பில் சுமார் 1.75 கோடி ரூபாய்) செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

COLLEGESTUDENT, US, BIZARRE