'இந்த போன்களில் இனி கூகுள் ப்ளே ஸ்டோர், யூடியூப் இல்லை'... 'வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி'!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

அமெரிக்க அரசின் உத்தரவால் இனிவரும், ஹூவாய் ஸ்மார்ட்ஃபோன்களில் கூகுள் செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

'இந்த போன்களில் இனி கூகுள் ப்ளே ஸ்டோர், யூடியூப் இல்லை'... 'வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி'!

கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் ஹூவாய் மிக வேகமான வளர்ச்சியை பெற்றுவருகிறது. மறுபக்கம் ஹூவாய் விற்பனை செய்துள்ள தொழில்நுட்ப சாதனங்களால், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவி வருகிறது என்று அமெரிக்க அரசு குற்றம்சாட்டி வந்தது.

ஹூவாய் நிறுவனம் மீது அமெரிக்க அரசு குற்றம்சாட்டி வந்தது மட்டுமல்லாமல், சென்ற வாரம் ஹூவாய் மற்றும் அதன் துணை நிறுவனங்களை அமெரிக்காவில் செயல்பட முடியாத அளவிற்கு தடை ஒன்றை விதித்துள்ளது. இந்தத் தடையால் கூகுள் - ஹூவாய் நிறுவனங்கள் இணைந்து வர்த்தகம் செய்யமுடியாத சூழல் உருவாகியுள்ளது.

எனவே இனி வரும் ஹூவாய் ஃபோன்களில் கூகுள் மேப்ஸ் மற்றும் யூடியூப் செயலிகள் செயல்படாது என்றும் கூறுகின்றனர். தற்போது வாடிக்கையாளர்களிடம் உள்ள ஹூவாய் ஃபோன்களுக்கு எந்த சிக்கலுமில்லை. இதுகுறித்து ஹூவாய் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது பதில் ஏதும் அளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய ஸ்மார்ட்ஃபோன் வாடிக்கையாளர்கள், கூகுள் செயலிகள் இல்லை என்றால் ஹூவாய் தாயாரிப்புகளை வாங்குவது பல மடங்கு குறையும். ஆனால் கூகுள் இல்லாத ஸ்மார்ட்ஃபோன்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களும் உள்ளனர். புதிய இயங்குதளத்துடன் வரும்போது இந்த ஸ்மார்ட்ஃபோன்களை கண்டிப்பாக வரவேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

டெலிகாம் துறையின் அடுத்தகட்டமான 5ஜி தயாரிப்பில் ஹூவாய் மிக வேகமாக இயங்கி வரும் நிலையில், அமெரிக்க அரசின் இந்த தடையால் மிகப் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகும் என்று கூறுகின்றனர்.

HUAWEI, GOOGLE, SUSPENDS