‘எனக்கு ஜனநாயக கடமைதான் முக்கியம்’!.. தனது மோசமான உடல்நிலையிலும் வாக்களிக்க வந்த பெண்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மக்களவைக்கான கடைசி கட்ட தேர்தலில் உடல் நிலை மோசமாக இருந்த போதும், தன் வாக்கை செலுத்துவதற்கு 330 கி.மீ பயணித்த பெண்மணிக்கு பாராடுக்கள் குவிந்து வருகிறது.

‘எனக்கு ஜனநாயக கடமைதான் முக்கியம்’!.. தனது மோசமான உடல்நிலையிலும் வாக்களிக்க வந்த பெண்!

ஜார்கண்ட் மாநிலம் டும்கா பகுதியை சேர்ந்தவர் ரேணு மிஷ்ரா. இவர் தற்போது நுரையீரல் நோயால் பாதிக்கபட்டு கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் வசிக்கும் டும்கா தொகுதியில் நேற்று நாடாளுமன்ற தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் தனது வாக்கை செலுத்தி தனது ஜனநாயக கடைமையை செய்வதற்காக மோசமான உடல் நிலையிலும் 330 கிமீ பயணித்துள்ளார். இந்நிலையில், ரேணு மிஷ்ரா தனது வாக்கினை செலுத்திய பின் ‘நான் இருக்கும் வரை என்னுடைய ஜனநாயக கடைமையை  நாட்டின் வளர்ச்சிக்காக செய்வேன்’ எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து, டும்கா  பகுதியின் காவல் துணை ஆணையர் முகேஷ் குமார் கூறுகையில், ரேணு மிஷ்ராவின் விருப்பத்தை அறிந்த அவரின் குடும்பத்தார். கடந்த மே12 ஆம் தேதி இதனை பற்றி தன்னிடம்  தெரிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு  கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, ரேனு மிஷ்ரா வாக்களிக்க பயணிப்பதற்காக ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவ ஏற்பாடுகளை செய்ததாக காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், தன் உடல்நிலையை பொருட்படுத்தாமல் வாக்களிக்க 330 கிமீ பயணித்த ரேணு மிஷ்ராவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

LOKSABHAELECTIONS2019, JARKHAND, OLDWOMAN, VOTE