இனிமேல் கூகுள்லையும் உணவு ஆர்டர் செய்யலாம்..! புது ஆப்ஷனை அறிமுகப்படுத்திய கூகுள் நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் வசதியை தற்போது கூகுளும் தொடங்கியுள்ளது.
இன்றைய நவீன உலகத்தில் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதன்மூலம் மக்களுக்கு பயன்படும் பல புதிய செயலிகளும் அறிமுகமாகிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் நகரங்களில் அதிகரித்துள்ளது.
இதில் ஸ்விகி, ஜொமெட்டோ, ஊபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆல்லைன் மூலமாக உணவை வழங்குவதில் முன்னணியில் இருந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனமும் ஆன்லைனில் உணவை பெறும் புதிய ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக தனியாக ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய தேவையில்லை. கூகுள் சர்ச் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்ற சேவைகளில் ‘ஆர்டர் ஆன்லைன்’ என்ற ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளனர். மேலும் ஆர்டர் செய்த உணவுக்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது கூகுள் பே மூலமாகவோ அல்லது ரொக்கமாகவோ செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த சேவையின் தொடக்கமாக DoorDash, Postmates, Delivery.com, Slice, ChowNow போன்ற நிறுவனங்களின் உணவுகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.