'கோச்சிங் சென்டரில் தீ விபத்து'... 'மாணவர்களை காப்பாற்றிய இளைஞர்'... 'வைரல் வீடியோ'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

'கோச்சிங் சென்டரில் தீ விபத்து'... 'மாணவர்களை காப்பாற்றிய இளைஞர்'... 'வைரல் வீடியோ'!

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் பிரமாண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்த வளாகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள பயிற்சி வகுப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 23 குழந்தைகள் சிக்கி பரிதாபமாக பலியாகினர்.

மளமளவென பரவிய தீயை 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர்.  தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்றும், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.

சூரத் நகரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார். இதனிடையே குழந்தைகள் உயிரை காத்துக்கொள்ள உயரமான மாடியிலிருந்து விழும் வீடியோ வெளியாகி நெஞ்சை பதறவைத்தது. இந்நிலையில், டியூஷன் சென்டர் கட்டடத்திற்கு பின்புறம், கேத்தன் என்ற இளைஞர் வசித்து வருகிறார்.

தீ விபத்து ஏற்பட்டதை கண்டதும், கட்டடத்தின் வெளிப்புறம் வழியாக, இரண்டாவது மாடி வரை ஏறி, கீழே குதிக்க முயன்ற பல மாணவர்களை காப்பாற்றி உள்ளார். தன் உயிரை பணயம் வைத்து, பல மாணவர்களை காப்பாற்றிய கேத்தனுக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.

FIREACCIDENT, PRIMEMINISTER