2019-ம் ஆண்டில்...அதிகம் 'டவுன்லோடு' செய்யப்பட்ட... ஆப்ஸ்&கேம்ஸ் இதுதான்!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

2019-ம் ஆண்டில் வாடிக்கையாளர்களால் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் பேஸ்புக் மெஸஞ்சர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் ஆகியவை அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்கள் பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.

2019-ம் ஆண்டில்...அதிகம் 'டவுன்லோடு' செய்யப்பட்ட... ஆப்ஸ்&கேம்ஸ் இதுதான்!

அதேபோல  அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட கேம்கள் வரிசையில் முதல் மூன்று இடங்களை பிரீ பயர் (Free fire), பப்ஜி மொபைல்( PUBG Mobile) மற்றும் சப்வே சர்பர்ஸ் (Subway Surfers) ஆகிய கேம்கள் உள்ளன. அடுத்த மூன்று இடங்களை Good job games என்ற ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த கலர் பம்ப் 3டி (Color bump 3D), பன் ரேஸ் 3டி (Fun race 3D) மற்றும் ரன் ரேஸ் 3டி (Run race 3D) கேம்கள் உள்ளன.

கடந்த வருடம் 3-ம் இடத்தில் இருந்த பப்ஜி கேம் இந்த வருடம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2 மாதங்களுக்கு முன் வெளியான கால் ஆப் டியூட்டி மொபைல் (Call of duty: Mobile ) இந்த பட்டியலில் 10-வது பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்கள்:

1. பேஸ்புக் மெஸஞ்சர்

2. பேஸ்புக்

3. வாட்ஸ் ஆப்

4. டிக் டாக்

5. இன்ஸ்டாகிராம்

6. ஷேர்இட்

7. லைக்

8. ஸ்நாப்சாட்

9. நெட் பிளிக்ஸ்

10. ஸ்பாட்டிஃபை

அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட கேம்கள்:

1. ப்ரீ பயர்

2. பப்ஜி மொபைல்

3. சப்வே சர்பேர்ஸ்

4. கலர் பம்ப் 3டி

5. பன் ரேஸ் 3டி

6. ரன் ரேஸ் 3டி

7. மை டாக்கிங் டாம் 2

8. ஹோம்எஸ்கேப்ஸ்

9. ஸ்டாக் பால்

10. கால் ஆப் டியூட்டி மொபைல்