‘ஸ்டோரீஸ் வசதியை நீக்கும் பிரபல செயலி’.. ‘இனி குரூப்களில் இது கிடையாது’..
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஃபேஸ்புக் செயலியில் இருந்து குரூப் ஸ்டோரீஸ் என்ற வசதி செப்டம்பர் 26ஆம் தேதி முதல் நீக்கப்பட உள்ளது.
உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் பிரபல செயலிகளில் ஒன்றாக உள்ள ஃபேஸ்புக் கடந்த 9 மாதங்களுக்கு முன் குரூப் ஸ்டோரீஸ் என்ற வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது. இதன்மூலம் ஒரே நேரத்தில் 250 ஸ்டோரீக்கள் அல்லது வீடியோக்கள் வரை பதிவிட முடியும். இந்நிலையில் இந்த வசதி பயனாளர்களால் அதிகம் பயன்படுத்தப்படாததால் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
வரும் செப்டம்பர் 26ஆம் தேதி இரவு 9.30 மணியுடன் இந்த வசதி ஃபேஸ்புக் தளத்திலிருந்து நீக்கப்பட உள்ளது. இதற்கு முன்னர் பயனாளர்கள் பதிவிட்ட ஸ்டோரீஸ் அனைத்தும் நீக்கப்படும் எனவும் புதிதாக எதையும் இனி பதிவிட முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஃபேஸ்புக்கிலிருந்து குரூப் ஸ்டோரீஸ் வசதி மட்டுமே நீக்கப்படுகிறது. தனிப்பட்ட பயனாளருக்கான ஸ்டோரீஸ் வசதி நீக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.