‘விதியை மீறிய கிரிக்கெட் பிரபலம்’... ‘கார் ஓட்ட ஓராண்டு தடை’

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அதிவேகத்தில்  சொகுசு காரை ஓட்டிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவானுக்கு, கார் ஓட்ட ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘விதியை மீறிய கிரிக்கெட் பிரபலம்’... ‘கார் ஓட்ட ஓராண்டு தடை’

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற வார்னே, அவ்வப்போது வர்ணனை செய்து வருகிறார். ஷேன் வார்னே ஆஸ்திரேலிய குடிமகனாக இருந்தாலும், லண்டனில் சொகுசு வீடு வாங்கி அங்கேயே வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் சொகுசு கார் ஓட்டும்போது, குறிப்பிட்ட அளவைவிட மிக வேகத்தில் ஓட்டியதாக போலீசிடம் சிக்கினார். இது தொடர்பான வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து, இதுவரை 6 முறை இதே போன்று குறிப்பிட்ட அளவை விட வேகமாக ஓட்டி போலீசிடம் சிக்கியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அடுத்த 12 மாதங்களுக்கு, அதாவது ஒரு வருடத்திற்கு ஷேன் வார்னே எந்தவித வாகனமும் ஓட்டக் கூடாது, என்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு இந்திய மதிப்பில், சுமார் ரூ.3 லட்சத்து 13 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதிகவேகமாக கார் ஓட்டி தனது ஓட்டுநர் உரிமத்தில் 15 அபராதப் புள்ளிகளை வார்னே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHANEWARNE, AUSTRALIA, CAR, BAN