தனியார் விடுதி அறையில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி.. ஆனால் மேலும் டந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை சேப்பாக்கத்தின் மியான் சாஹிப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்த காதல் ஜோடிகள் இருவரும் தற்கொலைக்கு முயற்சித்ததில், காதலி இறந்துவிட்டதாகவும், காதலன் இறந்துவிட்டதாகவும், விடுதி மேனேஜர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற திருவல்லிக்கேணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிதரன் தகவல் தெரிவித்துள்ளார்.

தனியார் விடுதி அறையில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி.. ஆனால் மேலும் டந்த சோகம்!

இதுகுறித்து கூறிய போலீஸ் உயரதிகாரி, வடசென்னையைச் சேர்ந்த மார்க்கெட்டிங் பணியாளர் 23 வயதான சுமர் சிங் என்பவரும், 21 வயதான காஜல் என்கிற கல்லூரி பயிலும் இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் காஜலுக்கு வேறு ஒருவருடன் நிச்சயமானதால் இருவரும் மன உளைச்சலில், தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுத்துள்ளனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக காஜல் மட்டும் உயிரிழந்துவிட்டார். தற்கொலைக்கு முயற்சித்து ஆனால் காப்பாற்றப்பட்ட சுமர் சிங் இதுபற்றி பேசியபோது தங்களால் சேர்ந்து வாழ முடியாததால், இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார். அதே சமயம்,  காஜலைக் கடத்திச் சென்றதாக சுமர் சிங் மீது காஜலின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் சிசிடிவி காட்சிகளை பரிசோதித்த போது, இருவரும் சேர்ந்து விடுதிக்குள் சென்றதும், போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது இருவருமே தற்கொலைக்கு முயற்சித்ததாகவுமே தெரிகிறது என்று கூறியுள்ள போலீஸார் சுமர் சிங்கை விசாரித்துவருகின்றனர்.

SUICIDE, LOVE, POLICE