வீட்ல வந்து ‘கிரிக்கெட் கிட்’ தொட்டு அழுதுட்டாரு.. யுவராஜ் சிங் மனைவி உருக்கம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

யுவராஜ் சிங் ஓய்வு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவுடன் ‘கிரிக்கெட் கிட்’யை தொட்டுப்பார்த்து வருந்தியதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

வீட்ல வந்து ‘கிரிக்கெட் கிட்’ தொட்டு அழுதுட்டாரு.. யுவராஜ் சிங் மனைவி உருக்கம்!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டர் யுவராஜ் நேற்று தெரிவித்தார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை உண்டாக்கியது. யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 304 ஒருநாள், 58 டி20 மற்றும் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2011 -ம் ஆண்டு உலகக்கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்.

கிரிக்கெட்டில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு பெற்றது குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ‘உங்களின் சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கைக்கு என பாரட்டுக்கள். நீங்கள் பல நினைவுகளையும், வெற்றிகளையும் எங்களுக்கு தந்துள்ளீர்கள்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதேபோல் சச்சின், சேவாக், ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் தங்களது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2016 -ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி அனுப்பிய ‘கிரிக்கெட் கிட்’யை தொட்டுப்பார்த்து யுவராஜ் சிங் கண்கலங்கியதாக அவரது மனைவி ஹஷெல் கீச் உருக்கமாக தெரிவித்துள்ளார். இது யுவராஜ் சிங் புற்றுநோயில் இருந்து மீண்டு விளையாடிய போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.