“என்னது கோழிக்கறிக்கு சண்டையா”?.. ‘கறி கேட்ட அண்ணனை பெட்ரோல் உற்றி கொளுத்திய தம்பி’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மது போதையில் கோழிக்கறி கேட்டு சண்டையிட்ட அண்ணனை, தம்பி பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“என்னது கோழிக்கறிக்கு சண்டையா”?.. ‘கறி கேட்ட அண்ணனை பெட்ரோல் உற்றி கொளுத்திய தம்பி’!

சிவகங்கை மாவட்டம்  காரைக்குடியை சேர்ந்தவர் மீனாள். இவரின் முத்த மகன் பிரதாப், இரவு சாப்பிடும்போது அதிகமாக கோழிக்கறி கேட்டு சண்டையிட்டுள்ளார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது தம்பி பிரதீஸ், அம்மாவுடன் ஏன் சண்டையிடுகிறாய் என தட்டிக் கேட்டுள்ளார்.

இதையடுத்து, இருவருக்கும் கோழிக்கறியால் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த அண்ணன் மீது, பிரதீஸ் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், பலத்த தீ காயமடைந்த பிரதாப், காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த செட்டிநாடு போலீசார், தப்பியோடிய பிரதீசை தேடி வருகின்றனர்.

SIVAGANGAI, CRIME