“பர்ஸ்ட் டைம் இந்தியா இத பண்ணபோகுது”!.. ‘ஏவுகணைகள் ஏற்றுமதிக்கு தயாராகும் இந்தியா’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு முதல் முறையாக ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தயாராகி வருகிறது.

“பர்ஸ்ட் டைம் இந்தியா இத பண்ணபோகுது”!.. ‘ஏவுகணைகள் ஏற்றுமதிக்கு தயாராகும் இந்தியா’!

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ராணுவ தளவாடப் பொருட்கள் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. அதில் கலந்து கொண்ட பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் எஸ்.கே. ஐயர், ஏவுகணை ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தம் செய்வதற்கு மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகள் இந்தியாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக கூறியுள்ளார். மேலும், வளர்ந்து வரும் சிறிய நாடுகள் புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஏவுகணைகள் இந்தியாவிடமிருந்து வாங்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு தயாரிப்பில் பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

EXPORT, INDIAN MISSILE