காதலித்து 'திருமணம்' செய்த... 7 மாதத்தில் 'கணவர்' காணாமல் போனதால்... விபரீத முடிவு எடுத்த 'இளம்பெண்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமணமான 7 மாதத்தில், கணவர் திடீரென காணாமல் போனதால் கர்ப்பிணி இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து 'திருமணம்' செய்த... 7 மாதத்தில் 'கணவர்' காணாமல் போனதால்... விபரீத முடிவு எடுத்த 'இளம்பெண்'!

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள அணைப்பட்டியைச் சேர்ந்தவர் பிரியங்கா (20). இவர், வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பூவரசன் (25) என்பவரை காதலித்து 7 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்த நிலையில், கடந்த 10 நாட்களாக இவரது கணவர் பூவரசன் திடீரென காணாமல் போயுள்ளார். எங்கு தேடியும் கணவர் கிடைக்காததால், மனமுடைந்து பிரியங்கா விரக்தியில் இருந்துள்ளார். இதையடுத்து, கூடலூர் அருகே உள்ள குறுவனத்துப்பாலத்திற்கு சென்று, நீண்ட நேரம் பிரியங்கா அழுதுக்கொண்டிருந்துள்ளார்.

பின்னர், கணவரை காணாத விரக்தியில், முல்லைப்பெரியாற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஓடிவந்து, பிரியங்காவை தடுத்து நிறுத்தி காப்பாற்றியுள்ளனர்.  தற்கொலை செய்துகொள்ள வந்ததாக பிரியங்கா கூறியதால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அவரை, லோயர்கேம்ப் போலீசாரிடம் கொண்டுபோய் ஒப்படைத்தனர். இதையடுத்து பிரியங்காவின் குடும்பம் பற்றி விசாரணை செய்து வரும் போலீசார், அவர் எதனால் இப்படி செய்தார் என விசாரித்து வருகின்றனர். கர்ப்பிணி பெண் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

HUSBANDANDWIFE, LOVE, AFFAIR