'மின்சார ரயில்களில் அதிரடி ஆஃபர்'...'ஒரே ஒரு பாஸ் மட்டும் போதும்'...மகிழ்ச்சியில் 'சென்னை மக்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் சுற்றுலா பயணிகள், பொது மக்களை கவரும் வகையில், அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

'மின்சார ரயில்களில் அதிரடி ஆஃபர்'...'ஒரே ஒரு பாஸ் மட்டும் போதும்'...மகிழ்ச்சியில் 'சென்னை மக்கள்'!

சென்னை மின்சார ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறர்கள். அதிலும் குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் ரயில்வே அறிமுகப்படுத்தி இருக்கும்  ‘பாஸ்’கள் மூலம் பயணிகள் எளிதில் பயணம் செய்யலாம்.

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் ஒரு நாள், 3 நாள், 5 நாட்களுக்கான ‘பாஸ்’ வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாள் முழுவதும் பயணம் செய்யும் வகையில் 2-ம்வகுப்பு ரெயில் பாஸ் ரூ.70-க்கு கிடைக்கும் முதல் வகுப்பு ‘பாஸ்’ ரூ.295-க்கு வழங்கப்படுகிறது.

இதனிடையே இந்த பாஸின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இதனை எடுப்பவர்கள் சென்னையில் உள்ள அனைத்து மின்சார ரெயில்களிலும் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்யலாம். இதுகுறித்து ரயில்வே அதிகாரி கூறும்போது, ''ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் புறநகர் மின்சார ரெயில்களில் ‘பாஸ்’வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விரும்பிய இடங்களுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.

மேலும் ரெயில் நிலையங்களில் ஒரு நாள், 3நாள், 5 நாட்கள் என 3 வகையான பாஸ்கள் வினியோகம் செய்யப்படும்'' என அவர் கூறினார். இந்நிலையில் ரயில்வேயின் புதிய பாஸ் குறித்து பேசிய பயணிகள் சிலர், ''இதன் மூலம் ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க பயணிகள் காத்திருக்கும் நேரம் குறையும். இதன் மூலம் நேரம் மிச்சமாகும். தினசரி அதிகமாக ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு நிச்சயம் இது உதவியாக இருக்கும்'' என தெரிவித்தார்கள்.

RAILWAY, TRAIN, CHENNAI, CHENNAI SUBURBAN RAILWAY, PASSENGERS, PASS