‘திடீரென இறந்த கணவரால் நிகழ்ந்த சோகம்’... ‘குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்தப் பெண்’... 'செய்த காரியத்தால்'... 'உறைந்துபோன குடும்பம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திடீரென கணவரை இழந்ததால், ஏற்பட்ட சோகத்தில் இருந்துவந்த பெண் ஒருவர், பெற்றோர் வீட்டுக்கு வந்தநிலையில், அவர் செய்த காரியம் மனவலியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன் - லீலாவதி தம்பதியினர். இவர்கள் தங்களது திருமணம் ஆகாத மகன் மாதவன், கணவரை இழந்த மகள் வேதவள்ளி மற்றும் அவரது 5 வயது குழந்தை கார்குழலி ஆகியோருடன், கடந்த 6 மாதத்திற்கு முன்னர், பெங்களூரிலிருந்து இங்கு வந்து குடியேறியுள்ளனர். இந்நிலையில், இவர்கள் வீட்டில் நள்ளிரவில், பயங்கர சத்தம் கேட்டுள்ளநிலையில், அந்நேரத்தில் தலையில் ரத்த காயங்களுடன் வந்த மாதவன் மற்றும் அவரது பெற்றோர், குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று கால் டாக்சியில், மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்த மருத்துவர்கள், மாதவனுக்கு சிகிச்சை அளித்தநிலையில், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், ராமகிருஷ்ணனின் வீட்டிற்கு சென்றனர். அங்கு தனியாக இருந்த வேதவள்ளி வெகுநேரமாகியும், கதவை திறக்காததால், பின்னர் ஜன்னலை உடைத்துப் பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கியநிலையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், தந்தை ராமகிருஷ்ணனிடம் விசாரித்தனர்.
அதில், வேதவள்ளி திருமணம் ஆகி அமெரிக்காவில் வசித்து வந்தபோது, திடீரென அவரது கணவர் கண்ணன் இறந்துள்ளார். இதனால் தனது, 5 வயது மகள் கார்குழலியுடன், ஊர் திரும்பிய வேதவள்ளிக்கு, மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக பெங்களூருவில் தங்கி சிகிச்சையும், எடுத்துவந்ததாகத் தெரிகிறது. இதற்கிடையில் திடீர், திடீரென வேதவள்ளி, ஆவேசம் வந்து, அருகில் இருப்பவர்களை தாக்குவதுடன், பொருட்களை தூக்கி எறிவார் என்று கூறப்படுகிறது. கோவை வந்தப்பின்னும் இது தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.
வழக்கம்போல் நள்ளிரவும் வேதவள்ளி, ஆவேசம் அடைந்து, டிவி பொருட்களை உடைத்ததுடன், கட்டுப்படுத்த முயன்ற, அவரது தம்பி மாதவனை தாக்கியதாக தெரிகிறது. பின்னர் தனது குழந்தையின் கழுத்தில் காலை வைத்து மிதித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் மயக்கமடைந்த குழந்தை, மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில், உயிரிழந்துவிட்டதாக ராமகிருஷ்ணன் போலீசாரிடம் கூறியுள்ளார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.