'இது செம டீல்'...'இந்த தப்ப மட்டும் பண்ணிட்டீங்க'...ஊருக்கே 'ஆட்டுக்கறி விருந்து' போடணும்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கிராமங்களில் தவறு செய்தால் அங்குள்ள பஞ்சாயத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் குடிபோதையில் பிடிபட்டால் கிராமத்திற்கே ஆட்டுக்கறி விருந்து வைக்க வேண்டும் என்ற, வினோத தண்டனை வழங்கும் கிராமம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

'இது செம டீல்'...'இந்த தப்ப மட்டும் பண்ணிட்டீங்க'...ஊருக்கே 'ஆட்டுக்கறி விருந்து' போடணும்!

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அமிர்காத் தாலுகாவில் உள்ள பழங்குடி கிராமம் தான்  காதிசிதாரா. இந்த கிராமத்தில் இருக்கும் பலர் மதுவுக்கு அடிமையானவர்கள். அவர்கள் மது குடித்துவிட்டு  பலருக்கும் தொந்தரவு கொடுத்து வந்தனர். இதன்காரணமாக கிராமத்தில் மோதல்கள் மற்றும் கொலைகள் அதிகரித்தன. இதைத் தடுக்க பெரியவர்கள் ஒன்று கூடி  குடிபோதையில் வந்தால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தனர்.

அதன் அடிப்படையில் குடிபோதையில் பிடிபட்டால் ரூ .2,000 அபராதம் எனவும் குடித்துவிட்டு மோதலை ஏற்படுத்தினால் ரூ.5,000 அபராததுடன் கிராமத்தில் உள்ளவர்களுக்கு ஆட்டுக் கறி விருந்து வைக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம் குடிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

இதனிடையே ஆரம்ப ஆண்டுகளில் சராசரியாக மூன்று முதல் நான்கு நபர்கள் பிடிபட்ட நிலையில்,  2018 ஆம் ஆண்டில் ஒருவர் மட்டுமே குடிபோதையில் பிடிபட்டார். அதே நேரத்தில் 2019 ஆம் ஆண்டில் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று கிராமவாசிகள் கூறுகின்றனர்

GUJARAT, KHATISITARA VILLAGE, BANASKANTHA DISTRICT, MUTTON CURRY, DRUNK