'தீபாவளிக்கு'.. 'மழை இருக்கா? இல்லையா?'.. 'நம்பலமா நம்பக் கூடாதா?'.. வானிலை ஆய்வு சொல்வது என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அனைத்து இடங்களிலும் பவரலாக மழை பெய்துவரும் நிலையில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு  மண்டலம் உருவாகும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

'தீபாவளிக்கு'.. 'மழை இருக்கா? இல்லையா?'.. 'நம்பலமா நம்பக் கூடாதா?'.. வானிலை ஆய்வு சொல்வது என்ன?

இன்று மாலைக்குள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், தீபாவளி பண்டிகையான 27-ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் இதுபற்றிக் கூறும்போது கடலோர பகுதிகள் மற்றும் டெல்டா பகுதிகளில் நல்ல மழை பொழியும் என்று கூறியுள்ளார்.

குறிப்பாக வட தமிழ்நாட்டிலும், சென்னை உட்பட வட மாவட்டங்களிலும் தீபாவளி அன்று அதிக மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே தீபாவாளி அன்று பட்டாசு வெடிப்பதற்கான நேர நிர்ணயங்கள் இருக்கும் நிலையில், மழை பொழிவும் இருக்கும் என்கிற தகவல்கள் வெளிவந்துள்ளன.

RAIN, WEATHER, HEAVYRAIN, DIWALI, FESTIVAL