‘2 தடவ மதுவில் விஷம் கலந்தும் சாகல’.. ‘அதான்..!’.. கணவனை கொலை செய்த மனைவியின் பகீர் வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஜோலார்பேட்டை அருகே மதுவில் விஷம் கலந்து, கல்லால் அடித்து கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘2 தடவ மதுவில் விஷம் கலந்தும் சாகல’.. ‘அதான்..!’.. கணவனை கொலை செய்த மனைவியின் பகீர் வாக்குமூலம்..!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (43). இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி தாமலேரிமுத்தூர் பகுதியில் உள்ள மதுபானக்கடைக்கு பின்புறம் ரமேஷ்குமார் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் ரமேஷ்குமாரின் மனைவி நதியாவிடம் (37) போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். அதனால் போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான ரமேஷ்குமார் வேலைக்கு செல்லாமல் பணத்தை வீணாக செலவழித்து வந்துள்ளார். இதானல் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த நதியாவின் சகோதரர் அரவிந்தனின் மனைவியிடம் ரமேஷ்குமார் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனால் அரவிந்தனின் மனைவி அவரை விட்டு பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அரவிந்தன் சகோதரி நதியாவுடன் சேர்ந்து ரமேஷ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பத்தன்று ரமேஷ்குமாரை மது குடிக்க செல்போன் மூலம் அரவிந்தன் அழைத்துள்ளார். அதனை நம்பி வந்த ரமேஷ்குமாரின் மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளனர். பின்னர் அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. முன்னதாக கணவருக்கு மதுவில் விஷம் கலந்து  கொடுத்துள்ளார். ஆனால் அவர் மயக்கம் மட்டுமே அடைந்துள்ளார்.

இதனை அடுத்து மீண்டும் மதுவில் விஷம் கலந்து கொடுத்தும் ரமேஷ் இறக்காததால் கல்லை தலையில் போட்டுக் கொலை செய்துள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நதியா மற்றும் அவரது சகோதர் அரவிந்தனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CRIME, MURDER, HUSBANDANDWIFE, ILLEGALRELATIONSHIP