'கொரோனா' பீதியால் 'ரூபாய்' நோட்டுகளை 'சோப்பு' நீரில் கழுவும் வியாபாரி! .. 'வீடியோ'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் கொரோனா அச்சத்தால் விவசாயி ஒருவர் ரூபாய் நோட்டுக்களை சோப்புத்தண்ணீரில் கழுவியுள்ள வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

'கொரோனா' பீதியால் 'ரூபாய்' நோட்டுகளை 'சோப்பு' நீரில் கழுவும் வியாபாரி! .. 'வீடியோ'!

தொடுதல் மூலம் கொரோனா பரவுகிறது என்பதால் சானிட்டைஸர் அல்லது சோப்பு போட்டு கைகளை சுத்தமாக கழுவ சுகாதாரத்துறை வலியுறுத்தி வரும் நிலையில், அனைவரும் ஒருவரிடம் இருந்து பெறும் எதையும் நீண்ட நேரம் வைத்திருந்த பின்னர், அதில் இருக்கும் கொரோனா கிருமி அழிந்துபோன பின்னர் பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வுடன் செயல்படத் தொடங்கியுள்ளனர்.

ஒவ்வொரு பொருளிலும் பொருளுக்கு தகுந்தாற்போல் கொரோனா வைரஸ் கிருமி குறிப்பிட்ட நேரம் தங்கியிருக்கும் என்று கூறப்படுவதை அடுத்து, அனைவரும் இதனை பின்பற்றுகின்றனர். இந்த நிலையில் வியாபாரி ஒருவர் சந்தைக்குச் சென்று தான் கொண்டு வந்த பொருட்களை விற்று சம்பாதித்தவற்றைக் கொண்டு ஈட்டிய பணத்தை சோப்பு நீரில் அலசுகிறார்.

தான் கொண்டு வந்த பட்டு ஜவுளிகளை முஸ்லீம்கள் இருக்கும் ஏரியாவில் விற்ற அந்த நபர் , தன்னிடம் இருந்த 2000, 500, 100  ரூபாய் நோட்டுகளை சோப்பு நீரில் அலசும்

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.