'லவ்வர்ஸ' தாக்குறது... அவங்களுக்கு 'கல்யாணம்' பண்ணி வைக்குறதெல்லாம் வச்சுக்காதீங்க... மீறி செஞ்சீங்கன்னா? அவ்ளோதான்... கடும் எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி வாழ்த்து அட்டைகள், பரிசுப்பொருட்கள், ரோஜாக்கள் விற்பனை களைகட்டி வருகிறது. இதற்கிடையில் காதலர் தினம் தமிழக கலாச்சாரத்திற்கு எதிரானது என கூறி இந்து அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடற்கரை மற்றும் பூங்காக்களில் காதல் ஜோடிகள் அத்துமீறினால் அவர்களை பிடித்து திருமணம் செய்து வைப்போம் என இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
இதனால் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கவும், பொது இடங்களில் காதல் ஜோடிகள் அத்துமீறுவதை தடுக்கும் வகையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக கடற்கரைகள், பூங்காக்கள் ஆகியவற்றில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் காதல் ஜோடிகள் அத்துமீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காதல் ஜோடிகள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினாலோ அல்லது அவர்களுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க முயன்றாலோ அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.