வீட்டுல இருந்த 'பொண்டாட்டி',புள்ளைங்கள காணோம் சார்... எப்டியாவது 'கண்டுபுடிச்சு' கொடுங்க... காவல் நிலையம் சென்ற 'காதல்' கணவர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வீட்டில் இருந்த மனைவி, குழந்தைகள் மாயமாகி விட்டதாக, காதல் கணவர் காவல் நிலையத்துக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வீட்டுல இருந்த 'பொண்டாட்டி',புள்ளைங்கள காணோம் சார்... எப்டியாவது 'கண்டுபுடிச்சு' கொடுங்க... காவல் நிலையம் சென்ற 'காதல்' கணவர்!

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குட்டி(29). இவரும் அதே பகுதியை சேர்ந்த தேவகிருபா(27) என்பவரும் 6 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வெற்றித்துரை(5), லதா ஜாஸ்பர்(4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சமையல் மாஸ்டராக இருக்கும் முத்துக்குட்டி வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டு கடந்த 7-ம் தேதி வீடு திரும்பி இருக்கிறார். அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி, குழந்தைகளை காணவில்லை. இதனால் அதிர்ந்து போன முத்துக்குட்டி பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.

இதையடுத்து முத்துக்குட்டி போலீசில் புகார் செய்ய, போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகின்றனர்.