‘திருநள்ளாறு கோவிலுக்கு’... ‘குடும்பத்துடன் சாமி கும்பிட சென்றுவிட்டு’... ‘திரும்பிய வழியில் நடந்தேறிய பயங்கரம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருநள்ளாறு அருகே திருச்சி அருகே இன்று அதிகாலை மரத்தில் கார் மோதி தீப்பிடித்தத்தில் 2 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘திருநள்ளாறு கோவிலுக்கு’... ‘குடும்பத்துடன் சாமி கும்பிட சென்றுவிட்டு’... ‘திரும்பிய வழியில் நடந்தேறிய பயங்கரம்’!

ஈரோடு மாவட்டம் கொளப்புத்தூர் தாங்குணி பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (29). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு ஆம்னி காரில் திருநள்ளாறு சனி பகவான் கோவிலுக்கு சென்றனர். அங்கு வழிபாடு நடத்தி முடித்து விட்டு நேற்றிரவு மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். காரை மணிகண்டன் (27) என்பவர் ஓட்டியுள்ளார். இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் திருஈங்கோய்மலை அருகே வரும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக  எதிர்புறமாகச் சென்று பள்ளத்தில் பாய்ந்து, அங்கிருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரின் முன்பகுதி சுக்கு நூறாக நொறுங்கியதுடன், ஆம்னி வேனில் ஏற்பட்ட கேஸ் கசிவு காரணமாக தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதில் காரின் முன்பகுதியில் இருந்த ஓட்டுநர் மணிகண்டன், மயில்சாமி ஆகிய 2 பேரும் முன்புற கதவுகளை திறக்க முடியாமல் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிழந்தனர். மயில்சாமியின் குழந்தை உள்பட மற்ற 5 பேரும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொட்டியம் போலீசார், காயமடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பலியான 2 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக முசிறி ஆஸ்பத்திரிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ACCIDENT, FIREACCIDENT, DIED, THIRUNALLAR, TEMPLE