'வருமானத்துறையின் அதிரடி ரெய்டு'... 'அதிர்ச்சியில் 'பிரபல தலைவரின்' ஆதரவாளர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தற்போது ஹாட் டாபிக்காக மக்களிடம் பேசப்படும் விஷயம் வருமானவரித்துறை சோதனை. தமிழகத்தில் நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆந்திராவில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

'வருமானத்துறையின் அதிரடி ரெய்டு'... 'அதிர்ச்சியில் 'பிரபல தலைவரின்' ஆதரவாளர்கள்!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள், நிறுவனங்களில் வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரது மகன் லோகேசுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லியைச் சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையானது சந்திரபாபு நாயுடுவின் முன்னாள் உதவியாளர் சீனிவாசராவ், லோகேசின் முக்கிய உதவியாளர் கிலருராஜேஷ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலின் போது இந்த நிறுவனங்களில் அதிகளவு பணப்புழக்கம் இருந்ததாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த அதிரடி சோதனை ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

INCOME TAX, RAID, ANDHRA PRADESH, CHANDRABABU NAIDU