Darbar USA

"இதுக்கு மேல முடியாது, என்னை விட்டிருங்க..." வேலை கிடைக்காத 'விரக்தியில்' வாலிபர் செய்த காரியம்... 'அதிர்ந்துபோன' ஆட்சியர் அலுவலகம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கள்ளக்குறிச்சியில் பி.ஏ. பிஎட் படித்திருந்தும் அரசு வேலை கிடைக்காத விரக்தியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

"இதுக்கு மேல முடியாது, என்னை விட்டிருங்க..." வேலை கிடைக்காத 'விரக்தியில்' வாலிபர் செய்த காரியம்... 'அதிர்ந்துபோன' ஆட்சியர் அலுவலகம்...

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக ஆட்சியரிடம் கொடுக்க வந்திருந்தனர்.

இந்நிலையில், கச்சிராயப்பாளையம் பகுதியை சேர்ந்த குமரவேல் என்பவரும் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்திருந்தார். அப்போது அவர் திடீரென தனது கையில் வைத்திருந்த பையில் இருந்து மண்ணெண்ணை கேனை எடுத்தார். பின்னர் மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி குமரவேல் தீக்குளிக்க முயன்றார்.

அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதைக் கண்டு பதறிப் போயினர். துரிதமாக செயல்பட்ட அவர்கள் குமரவேலை  தடுத்து நிறுத்தி அவரிடமிருந்த மண்ணெண்ணைக் கேனை கைப்பற்றினர்.  பின்னர் குமரவேலிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தான் பி.ஏ.பி.எட். படித்துள்ளதாகவும், பல்வேறு அரசு பொதுத்தேர்வுகளில் பங்கேற்று தேர்வு எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளதாகவும் குறிப்பட்ட அவர்,  தற்போது நடந்து முடிந்த குரூப்-4 தேர்விலும் கலந்து கொண்டு 178 மதிப்பெண் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் தனக்கு இதுவரை எந்தவித அரசு வேலையும் கிடைக்கவில்லை என்றும் திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டார்.

போதுமான வருமானம் இல்லாததால் தனது குடும்பம் வறுமையில் வாடுகிறது என்றும், இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தான் தீக்குளித்து தற்கொலை செய்ய முடிவு செய்து இன்று கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்ததாகவும் குறிப்பிட்டார். இச்சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

TRY TO IGNITE, YOUTH FIRE, KALLAKURICHI, GOVERNMENT JOB