Darbar USA

"பாகிஸ்தானில் விழுந்த இந்திய வீரர்!!"... "காஷ்மீரில் பரபரப்பு!"... "மீட்கப்படுவாரா?"...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காஷ்மீர் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர் பனியில் சறுக்கி, பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"பாகிஸ்தானில் விழுந்த இந்திய வீரர்!!"... "காஷ்மீரில் பரபரப்பு!"... "மீட்கப்படுவாரா?"...

ஜனவரி 8-ம் தேதி, பாராமுல்லாவில் இந்திய ராணுவ வீரர் ராஜேந்திர சிங் நேகி காணாமல் போய் விட்டதாக அவர் குடும்பத்திற்கு, ராணுவத்திடமிருந்து அழைப்பு வந்துள்ளது. தீவிர விசாரணைக்குப் பின்பும் தேடலுக்குப் பின்பும், அவர் குல்மார்க் பனிச்சறுக்கலில் சிக்கி, தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தியை அறிந்த நேகி குடும்பத்தினர், மிகுந்த மனஉலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், நேகி பத்திரமாக நாடு திரும்ப வழிவகை செய்யுமாறு, அவர் குடும்பத்தினர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

நேகி, 2002 ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

JAMMUANDKASHMIR, SOLDIER, INDIA, PAKISTAN