'மஞ்சள் இல்ல.. சந்தனம் இல்ல'.. 75 கிலோ அரைத்த மிளகாய்...பூசாரிக்கு நடந்த விநோத அபிஷேகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தர்மபுரி மாவட்டத்தை அடுத்த நலலம்பள்ளியில் கருப்பு சாமி அய்யனார் கோவில் விழாவில் அருள்வாக்கு சொன்ன பூசாரிக்கு நடந்த விநோதமான அபிஷேகம் கிடுகிடுக்க வைத்துள்ளது.

'மஞ்சள் இல்ல.. சந்தனம் இல்ல'.. 75 கிலோ அரைத்த மிளகாய்...பூசாரிக்கு நடந்த விநோத அபிஷேகம்!

சாதாரணமாக ஒரு மிளகாயைக் கடித்தாலோ பலரால் தாங்கிக் கொள்ள முடியாது. அடுத்த 10 நிமிடத்துக்கு சிறு சிறு மிடறாக தண்ணீர் குடித்தபடி இருப்பார்கள்.  ஆனால் இந்த ஊர் பூசாரிக்கு 75 கிலோ மிளகாயை அரைத்து இவரின் மீது, பால் ஊற்றுவது போல் ஊற்றி, அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திருவிழாவில், காலை 5 மணி முதலே மக்கள் கூடி, பின்னர் கருப்புசாமி அய்யனாருக்கு பூஜைகளை செய்து, அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்தனர். நிகழ்வின் ஒரு அங்கமாக கருப்புசாமிக்கு பூஜைகள் செய்த பூசாரிக்கு பரவச நிலை உண்டாகி, அருள் வாக்கு கூறுவாரென்று கூறப்படுகிறது.

அதன் பின்,  ஏற்கனவே அரைத்து வைத்திருந்த 75 கிலோ மிளகாய் கூழ்மத்தை அப்படியே பூசாரியின் தலையில் ஊற்றி அபிஷேகம் செய்துள்ளதாக புகைப்படங்களும், தகவல்களும் வெளியாகியுள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை இந்தத் திருவிழா நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

RITUALS, TEMPLE