'அவருக்குத் தெரியும் சாரே.. அந்த சிரிப்பையும், சந்தோஷத்தையும்'.. மைதானத்தை நெகிழ வைத்த .. வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிண்டீஸூக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த கோலிக்கு புளோரிடா மைதானத்தில் ரசிர்கள் கொடுத்த ஆர்ப்பரிக்கும் உற்சாகம் ட்ரெண்டானது.
முன்னதாக தனக்கும், ரோஹித்துக்குமான உறவில் விரிசல் இருப்பதாகவும், இருவரின் இடையேவும் எழுந்த யார் கேப்டன் என்கிற மனநிலைதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்றும், மேலும் இதற்கு அனுஷ்கா ஷர்மாவின் தலையீடலும் காரணம் என்றும் வதந்திகள் பல்வேறு விதமாக பரவின.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்குமாறு பேசிய கோலி, இந்தியாவில் இருந்து புளோரிடாவில் விண்டீஸூடன் மோதுவதற்கு புறப்பட்டார். அதே சமயம், ரோஹித்தும், தான் நாட்டுக்காக விளையாடுவதாகவும், அணிக்காக மட்டும் விளையாடவில்லை என்றும் ட்வீட் செய்திருந்தார்.
இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் உள்ளிட்ட 3 வகையான போட்டிகளும் முறையே ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் தொடங்கவிருப்பதால், முதல் டி20-யில் ஆடுவதற்கான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்பதற்காக புளோரிடா மைதானத்துக்கு வந்த கோலியை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர்.
கோலி, தன் ரசிகர்கள் ஒவ்வொருவருடனும், முடிந்த அளவுக்கு செல்ஃபி எடுத்ததோடு, அவர்களின் டி-ஷர்ட்டிலும், தொப்பிகளிலும் ஆட்டோகிராஃப் போட்டார். இதுபற்றி பிசிசிஐ தனது ட்விட்டரில், ‘தன் ரசிகர்களிடையே எப்படி சிரித்து உற்சாகமூட்டி, தானும் மகிழ வேண்டும், அவர்களிடமும் சிரிப்பை உண்டாக்க வேண்டும் என்று கோலிக்குத் தெரியும்’ என்று பதிவிட்டுள்ளது.
Skipper @imVkohli does know how to bring smiles and joy to the fans 😃😃👏🙏 #TeamIndia pic.twitter.com/lqrAUaCODY
— BCCI (@BCCI) August 1, 2019