‘பொங்கல் பரிசு ரூ.1000’.. யாருக்கெல்லாம் கிடைக்கும்..? எப்போ..? வெளியான அறிவிப்பு..! விவரம் உள்ளே..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 தருவதற்கான நிதியை ஒதுக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் பிரிக்கப்பட்டது. இதனை நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார். இதனுடன் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று இதற்காக ரூ.2363 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வரும் 29ம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது அரிசி ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும் வழக்கப்படும் என்றும் சர்க்கரை ரேஷன் கார்டுகளுக்கு உள்ளவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.