‘விபத்தில் காயத்தோடு வந்தருக்கு’... ‘தையல் போட்ட துப்புரவு பணியாளர்’... ‘மருத்துவமனையில் நேர்ந்த சோகம்’... வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விபத்தில் படுகாயமடைந்த விவசாயிக்கு, அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர் ஒருவர், தையல் போடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘விபத்தில் காயத்தோடு வந்தருக்கு’... ‘தையல் போட்ட துப்புரவு பணியாளர்’... ‘மருத்துவமனையில் நேர்ந்த சோகம்’... வீடியோ!

புதுக்கோட்டை அருகே பெரியாளூர் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயியான கார்த்தீபன் (38). இவர் கடந்த திங்கள்கிழமை மாலை, கீரமங்கலம் சென்றுவிட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். கீரமங்கலம் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது, எதிரே மற்றொரு வாகனம் வந்ததால், வழிவிடுவதற்காக திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில் நிலைதடுமாறி சாலையிலேயே கார்த்தீபன் விழுந்துள்ளார். அப்போது ஹெல்மெட் முன்பகுதி உடைந்ததில், அவருக்கு கீழ் தாடை மற்றும் பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, செவிலியருக்கு பதில், துப்புரவு பணியாளர் ஒருவர் தையல் போட்டுள்ளார். கார்த்தீபனுக்கு தையல் போடுவதை வீடியோ எடுத்த அவரது சகோதரர் காந்தி, இதனை சமூக வலைதளங்களில் வேதனையுடன் வெளியிட்டுள்ளார்.

மேலும் ஐஎஸ்ஐ முத்திரை பதிக்கப்பட்டிருந்தாலும், ஹெல்மெட் தரமானதாக இல்லை என்று புகார் கூறியுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை வட்டாரத்தில், ஆட்கள் பற்றாக்குறையால் இதுபோன்று தையல் போடப்படுவதாக கூறினாலும், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அறந்தாங்கி அரசு மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

PATIENT, DOCTORS