‘லஞ்ச பாக்ஸாக மாறிய லஞ்ச் பாக்ஸ் அதிர்ந்த அதிகாரிகள்.. பதற வைக்கும் சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை நடத்தி சோதனையில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்துள்ளது.

‘லஞ்ச பாக்ஸாக மாறிய லஞ்ச் பாக்ஸ் அதிர்ந்த அதிகாரிகள்.. பதற வைக்கும் சம்பவம்’!

கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள இடலாக்குடி பத்திரப் பதிவு அலுவலகத்தில் அதிக அளவு லஞ்சப் பணம் புழக்கத்தில் உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால், லஞ்சப்பணம் சிக்கவில்லை.

இதையடுத்து, ஊழியர்கள் மதிய உணவு கொண்டு வரும் லஞ்ச் பாக்ஸில் சோதனை நடத்தியபோது அதில் கணக்கில் வராத 71,000 ரூபாய் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், லஞ்ச் பாக்ஸில் ரூ.71,000 லஞ்சப் பணம் சிக்கியதைத் தொடர்ந்து நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சப் - ரெஜிஸ்டர் ஈஸ்வரன் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், பத்திரப்பதிவுத் துறை ஊழியர்கள் வீடுகளிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SUBREGISTRAR OFFICE, BRIBE, POLICE INVESTIGATION, KANIYAKUMARI