'இனி இதுக்கெல்லாம் FIR தேவையில்ல.. தயவு தாட்சண்யமில்லாம அரஸ்ட் பண்ணுங்க'.. சுப்ரீம் கோர்ட் அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஜிஎஸ்டி செலுத்தாமல் ஏய்ப்பு செய்பவர்களை நிபந்தனைகளின்றி கைது செய்யலாம் என்றும், அவர்களுக்கு முன் ஜாமீன் தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் பரபரப்பான உத்தரவினை பிறப்பித்துள்ளது.

'இனி இதுக்கெல்லாம் FIR தேவையில்ல.. தயவு தாட்சண்யமில்லாம அரஸ்ட் பண்ணுங்க'.. சுப்ரீம் கோர்ட் அதிரடி!

கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தெலுங்கானா உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டு இந்த தீர்ப்பை அளித்துள்ளது. அதன்படி, சரக்கு மற்றும் சேவை வரி கட்டுவதில் ஏய்ப்பு செய்பவர்களுக்கு தயவு தாட்சயண்யமின்றி இடைக்கால நிவாரணங்கள் வழங்குதல் தவிர்க்கப்பட வேண்டும் என்று கேட்டிருந்தது.

முன்னதாக மும்பை உயர்நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட சில வழக்குகளில், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது எந்தவொரு முதல் தகவல் அறிக்கையும் (FIR) இல்லாததாலேயே அந்த வழக்குகளில் சிக்கியவர்களைக் கைது செய்யாமல் விசாரித்து வந்தது. ஒரு கட்டத்தில் அதில் பலரும் அவ்வழக்குகளில் இருந்து விடுவிக்கவும் பட்டனர்.

காரணம், காவல்துறையைப் போன்று எடுத்ததும் ஜிஎஸ்டி ஆணையர்களால் ஏய்ப்பு செய்பவர்கள் மீதான நேரடி நடவடிக்கைகளை துரித காலத்தில் எடுக்க முடியாத சூழல் இருந்தது. இந்த நிலையில், தெலுங்கானா நீதிமன்றத்தின் இந்த ஆலோசனை மற்றும் கோரிக்கையை ஏற்றது உச்சநிதிமன்றம்.

அதன்படி, எவ்வித FIR-ம் ஒருவர் மீது இல்லாமலே, அவர் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்திருந்தால், அவரை நிபந்தனைகளின்றி கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஜிஎஸ்டி ஆணையர்கள் மேற்கொள்ளலாம் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

SUPREMECOURT, GST