'இதெல்லாம் எங்க போய் முடியுமோ?'.. ஆப்-க்கு அடிமையான மனைவி.. சிறுவனின் பரிதாப நிலை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நெல்லையைச் சேர்ந்தவர் திவ்யா. இவர் திருச்சியைச் சேர்ந்த மகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த தம்பதியினர் ஒரு ஆண் குழந்தைக்கு பெற்றோர்களாக இருந்து வருகின்றனர்.

'இதெல்லாம் எங்க போய் முடியுமோ?'.. ஆப்-க்கு அடிமையான மனைவி.. சிறுவனின் பரிதாப நிலை!

ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக, திவ்யா தன்னிடம் இருந்த ஸ்மார்ட்போனில் டிக் டாக், ஸ்மியுல் ஆப்களை பயன்படுத்தத் தொடங்கி, அடிமையாகவே மாறிவிட்டார். குழந்தையை சரியாக கவனிக்காமல், கண்ட ஆடவரோடும் இந்த ஆப்களில் ஆபாசமான பாடல்களைப் பாடியுள்ளார். பாடல்களுக்கு முன்னர் வரும் ஆபாசமான வார்த்தைகளையும் பேசி நடித்துள்ளார்.

இந்த விஷயத்தால் கோபமடைந்த மகேஷ், தன் மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனால் இருவருக்குமான தகராறு முற்றிப் போகவே, கடந்த 2017-ஆம் ஆண்டு திவ்யா தன் மகனை அழைத்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்குச் சென்றுள்ளார். அதன் பிறகு தனது கணவர் மகேஷ்க்கு விவாகரத்து நோட்டீசும் அனுப்பியுள்ளார்.

ஆனால் மகேஷோ, தான் தன் மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்து மனு அளித்தார். இந்நிலையில் நெல்லை கங்கைகொண்டானில் உள்ள ஒரு பள்ளியில் , திவ்யாவுடன் இருக்கும் மகேஷ்-திவ்யாவின் மகன் பயின்று வருகிறார். ஆனால் அண்மையில் சிறுவனை யாரோ கடுமையாக அடித்திருப்பதை ஆசிரியர்கள் குழந்தை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் சொல்லியிருக்கின்றனர்.

விசாரித்ததில், சிறுவனை திவ்யாவின் ஆண் நண்பர்  ஒருவர் அடித்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து மகேஷ் முறையிட்டுள்ளார். இதனையடுத்து நிகழ்ந்த விசாரணைக்குப் பின்னர் குழந்தை நல பாதுகாப்பு மையத்தில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டு மீண்டும் தாய் திவ்யாவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சமூக ஆப் ஒன்றினால் சமூகத்தில் நிகழும் இத்தகைய உளவியல் முரண்பாடுகள் பலரையும் பதற வைத்துள்ளது.

SMARTPHONE, SOCIAL MEDIA, BIZARRE, HUSBANDANDWIFE, TIKTOK, SMULE