'அப்டியே வராம, கொஞ்சம் அட்வான்ஸா திரும்பி வந்துட்டேன்னு சொல்லு', இது ஸ்மார்ட் வாடகை சைக்கிள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் பைக் எனப்படும் நவீன வாடகை சைக்கிள் சேவையை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கிவைத்தார்.

'அப்டியே வராம, கொஞ்சம் அட்வான்ஸா திரும்பி வந்துட்டேன்னு சொல்லு', இது ஸ்மார்ட் வாடகை சைக்கிள்!

இதில் முதற்கட்டமாக மக்கள் அதிகம் கூடும் 25 இடங்களில் மொத்தம் 250 சைக்கிள்களை மக்கள் பயன்பாட்டிற்கு வைத்துள்ளனர். இது மேலும் 500 இடங்களில் 5000 சைக்கிள்களைக் கொண்டு இயங்கும் என்று தெரிவித்துள்ளனர்.

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 25 இடங்களில் இந்த சைக்கிள் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதில் மக்கள் எந்த மையத்திலிருந்தும் சைக்கிளை எடுத்து எந்த மையத்திலும் சைக்கிளை விடலாம். இந்த ஸ்மார்ட் பைக் திட்டத்தின் கீழ் சைக்கிள் ஒன்றுக்கு  வாடகையாக முதல் ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாயும் அடுத்த அரை மணிநேரத்திற்கு 9 ரூபாயும் டிஜிட்டல் முறையில் கட்டணமாக வசூலிக்கப்படும்.

மேலும் ஸ்மார்ட் பைக் மொபிலிட்டி என்ற மொபைல் ஆப்பின் மூலம் இந்த ஸ்மார்ட் பைக்கின் இருப்பிடம் மற்றும் செயல்பாடு பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில், டெல்லி, அமராவதி போன்ற நகரங்களில் செயல்பட்டுவரும் இந்த திட்டம் தற்போது சென்னையில் வெற்றிகரமாக துவங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SMARTBIKESYSTEM, TN GOVT, CYCLE RENTAL