‘விசாரணைக்கு உதவாத இந்த ஆப் எல்லாம் எதுக்கு? தடை பண்ணலாமே?’.. பொள்ளாச்சி வழக்கில் கடுப்பான நீதிமன்றம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அண்மையில் தமிழ் நாட்டையே உலுக்கிய வழக்கு பொள்ளாச்சி பாலியல் வழக்கு.

‘விசாரணைக்கு உதவாத இந்த ஆப் எல்லாம் எதுக்கு? தடை பண்ணலாமே?’.. பொள்ளாச்சி வழக்கில் கடுப்பான நீதிமன்றம்!

சமூக வலைதளங்கள் மூலம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் தகாத முறையில் பேசி அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை தவறுதலான முறையில் வீடியோக்கள் எடுத்து வைத்ததன் மூலம் மிரட்டி, துன்புறுத்தி பாலியல் குற்றங்களைச் செய்த திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ்குமார், சபரி ராஜன் உள்ளிட்ட இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் நிலையில், முன்னதாக இந்த வழக்கு தொடர்பான  வாட்ஸ் ஆப் ஆதாரங்களை திரட்டும் நோக்கில் பொள்ளாச்சி காவல் துறையினர் வாட்ஸ் ஆப் நிறுவனத்திடம் கேட்டதாகவும், ஆனால் வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்த வழக்கில் சரியான ஒத்துழைப்பு அளிக்காததையும் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்ட நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு இது போன்ற வழக்குகளின் விசாரணைக்கு ஒத்துழைக்காத வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை எதற்காக தடை செய்யக்கூடாது என்று கேட்டுள்ளனர்.

இதனையடுத்து, மத்திய அரசு தரப்பில் இருந்து இதற்கு வந்த பதிலின்படி, பல சமூக வலைத்தளங்கள் பலவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும், குறைகளைத் தீர்க்கக் கூடிய, பொது தகவல் அதிகாரிகளை இன்னும் நியமிக்காமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. கடைசியாக சட்டங்களை மதிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைக்காதது ஏன் என்று விளக்கம் அளிக்க கோரி, சம்மந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதோடு, இவ்வழக்கை ஒத்தி வைத்துள்ளது.