‘புதிய மோட்டர் வாகன சட்டம்’.. யாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம்..? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சாலை விதிகளை மீறுபவர்களிடம் எந்த அதிகாரிகள் அபராதம் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘புதிய மோட்டர் வாகன சட்டம்’.. யாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம்..? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

சமீபத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு வசூலிக்கப்படும் அபராதம் தொகை 10 மடங்காக உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம், சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1000, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது போக்குவரத்து விதிமீறல் என்பதே இல்லை என்ற நிலை வரவேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டதே தவிர அபராதம் விதிப்பது அரசின் நோக்கம் இல்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி யாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சப் இன்ஸ்பெக்டர்-க்கு (SI) நிகரான அதிகாரிகள் வரை வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சப் இன்ஸ்பெக்டர்-க்கு குறைவான அதிகாரிகள் அபராதம் வசூலிக்க கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

TAMILNADUPOLICE, TRAFFIC, TRAFFICRULES, POLICE, FINE, MOTORVEHICLESACT2019